———— A male's ego அவனுக்கு வாங்க ஆசை இருக்கு, அவளுக்கு வாங்கி குடுக்கிற மனசு இருக்கு. இருந்தாலும் தனுக்கு பிடிச்ச ஆடை போட்டு பாத்துட்டு, ஏக்கத்தோட திரும்ப வச்சுட்டு, வேலை தேடிட்டு இருந்த அந்த கணவன் சொன்னான்: “புடிச்சுருக்கு… ஆனா வேண்டாம்.” ⸻ Blind man seeing beauty… கண்ணு இல்லாத அவன், எது அழகுனு நினைக்கிறானோ… அதுவா இருக்க ஆசை. ⸻ She is the ink on every page எனக்கு எழுத சொல்லி கொடுத்தவளை பற்றி என்ன எழுத, தமிழ் மொழியை பற்றி தமிழில் பெருமையா எழுதுற மாதிரி இருக்கும். ⸻ A man cleaning the railways அவன்  கனவை  மறந்துட்டு, பல பேரோட பயணத்தை சுத்தமாக்குறான். ⸻ A male chauvinist perspective "பெண்கள் படிச்சு என்ன பண்ணப் போறாங்க?” என்று கேள்வி கேட்டவன், தன் மனைவி கருவுற்ற உடனே, தேடுகிறான் — ஒரு பெண் மகப்பேறு மருத்துவரை ⸻ Inspired from somewhere by, Gowtham